• Mar 28 2023

முதன் முறையாக தனது காதலனின் புகைப்படத்தை பகிர்ந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை- கியூட் கஃப்பில்ஸ்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் தற்போது  ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. நடிகை தேவயானி நடிப்பில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'கோலங்கள்' மெகாத்தொடரை இயக்கிய இயக்குநர் திருச்செல்வம் தான் இந்த 'எதிர்நீச்சல்' தொடரையும் தற்போது இயக்கி வருகிறார்.


இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.ஆணாதிக்கம், பெண் உரிமை ஆகியவற்றை மையக் கருவாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.


இந்த சீரியலில் வசு என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகை வைஷ்ணவி நடித்து வருகிறார். இந்நிலையில் வைஷ்ணவி தமது பிறந்த நாளை நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் நடிகை மதுமிதாவும் கலந்து கொண்டார்.


இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை வைஷ்ணவி, தமது காதலரை அறிமுகம் செய்துள்ளார். ஶ்ரீநி தினேஷ் எனும் நபரை காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement