• Apr 19 2024

குக்வித் கோமாளியின் மூத்த கோழி யார் தெரியுமா? பங்கமாக ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைத் தன்னகத்தே கொண்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற ஒரு நிகழ்ச்சி தான் 'குக்வித் கோமாளி'. இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் இதில் இடம் பெறும் நகைச்சுவைக்கு அளவே இல்லை. 


இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்து விட்ட நிலையில், இதன் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சிரிப்பிற்கும், காமெடிக்கும் என்றுமே பஞ்சம் இருப்பதில்லை. போட்டியாளர்கள் மட்டுமன்றி நடுவர்களும் தங்களுடைய பேச்சுக்களால் ரசிகர்களை சிரிக்க வைத்த வண்ணமே இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் நடுவர்கள் "புகழ் எந்தளவிற்கு ஒரு மட்டமான கோமாளி என்று சொல்லுங்க" என ஷெரினிடம் கேட்கின்றனர். அதற்கு ஷெரின் "அவர் ஒரு நல்ல கோமாளி, அந்த முட்டையில பார்த்தாலே தெரியும்" என்கிறார்.  இதனைக் கேட்டதும் புகழ் சற்றுக் காண்டாகி "இதற்கு நீ என்னைப் புகழாமலே இருந்திருக்கலாம்" என ஷெரினைத் திட்டுகின்றார். 


அதற்கு நடுவர் "குக்வித் கோமாளியின் மூத்த கோழி புகழ் நீ அழகாக முட்டை போடுறியாமே" எனக் கிண்டலாக கேட்கின்றார்.  அதற்கு இன்னொரு போட்டியாளர் அருகில் நின்றவரை பார்த்து "அவன் முட்டைக்  கோழி என்றால் நீ ப்ரோமோ கோழியா" எனக் கேட்கின்றார். அதற்கு அவர் "உனக்கு ப்ரோ கோழி கூட சொல்ல தெரியல, ப்ரோமோ கோழி என சொல்லுறாய்" எனக் கலாய்க்கின்றார்.

பின்னர் மைக் கோபியிடம் "ஏன் டாஸ்க் என்று வந்திட்டால் பேசவே மாட்டேங்கிறீங்க, ரொம்ப டென்ஷன் ஆகிடுறீங்க" எனக் கேட்கின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களும் மைக் கோபியை கலாய்க்கின்றனர்.


இதனைத் தொடர்ந்து ஷெரின் மற்றும் புகழினுடைய  ஸ்கோரினை அறிவிக்கின்றனர். அந்தவகையில் அவர்கள் 12 புள்ளிகள் பெற்றிருப்பதாக கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் நடுவர்கள் புகழை "குக்வித் கோமாளியின் மூத்த கோழி" எனக் கூறிய விடயமானது ரசிகர்களால் பங்கமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement