விஜய் டிவியிலிருந்து விலகிய குக்வித் கோமாளி புகழ்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

70185

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன ஹிட்டானவை என்பது தெரிந்ததே. அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி.

மேலும் இந்த நிகழ்ச்சியானது இது வரைக்கும் 2 சீசன்களைக் கடந்துள்ளது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் புகழ். இதையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. வலிமை படத்தில் அஜித்துடன் நடிக்கும் அளவுக்கு ஒரே நாளில் உச்சத்துக்கு சென்றார். இப்போது 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் கலந்துகொண்டு வந்த காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்ட வீடியோவில் ‘எல்லோருக்கும் வணக்கம். எப்படி இருக்கீங்க? கண்டிப்பாக எல்லோரும் நன்றாக இருப்பீர்கள். உங்களுடைய ஆதரவினால் எனக்கு ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளன.

அதனால் என்னால் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. சீக்கிரமாக மீண்டும் வந்து கலந்து கொள்வேன். இது ஒரு சின்ன இடைவெளி தான். படம் முடிந்தவுடன் வந்துவிடுவேன். சீக்கிரமாகவே சந்திக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.