• Mar 26 2023

குக் வித் கோமாளி அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்த போட்டியாளர்...கடைசியில் இப்படியொரு ட்விஸ்டா..?

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியானது இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த மூன்று சீசன்களின் அமோக வெற்றிக்கு பின்னர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆனது ஆரம்பமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும் குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கியதில் இருந்து பல திரைப்பிரபலங்களும் விருந்தினராக நிகழ்ச்சிக்கு வருகை தந்த வண்ணமே இருக்கின்றனர். 

இவ்வாறுஇருக்கையில் இதில் ஒரு வாரம் இம்யூனிட்டி சுற்று மற்றொரு வாரம் எலிமினேஷன் சுற்று என்பது போல் தான் இந்த நிகழ்ச்சியின் கட்டமைப்பு உள்ளது.


அந்த வரிசையில் இந்த வாரம் இம்யூனிட்டி சற்று நடைபெற்ற நிலையில், இதில் நடந்த முதல் நாள் டாஸ்கில் மைம் கோபி மற்றும் ஜி.பி. முத்து இருவரும் அட்வான்டேஜ் டாஸ்க்கை வென்றனர்.

இதன்பின் இன்று நடைபெற்ற இம்யூனிட்டி சுற்றியில் நன்றாக சமைத்து நடுவர்களிடம் பாராட்டை பெற்ற ஆண்ட்ரியன் மற்றும் தங்கதுரை இருவரும் இம்யூனிட்டி சுற்றை வென்றுள்ளார்கள்.



எனினும் இதன்முலம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள எலிமினேஷன் சுற்றில் இருந்த ஆண்ட்ரியன் தப்பித்துள்ளார். மேலும் இரண்டாவது முறையாக அவர் இம்யூனிட்டி சுற்றை வென்றுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement