தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் பிரபல வாரிசு நடிகர்-குவியும் பாராட்டுக்கள்

82

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் என்பதோடு ஆரம்பத்தில் பிரபு கதாநாயகனாக நடித்து வெளியாகி அனைத்துத் திரைப்படங்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் தற்பொழுது பிரபு குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகின்றார். அத்தோடு அஜித் ரஜினி விஜய் கமல் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவர். பிரபல நகையகத்தின் விளம்பரத்திலும் நடித்து உள்ளார்.

மேலும் இவரது மகன் விக்ரம் பிரபுவும் கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்தும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றாராம் . இவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: