• Apr 19 2024

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியிட்ட ஆதி-நிக்கி கல்ராணி ஜோடி..குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகர் ஆதி. மிருகம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ஈரம், அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக மாறினார்.

மேலும் இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மரகத நாணயம் திரைப்படம் பெரியளவில் வரவேற்பை பெற்றது.அப்பத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நிக்கி கல்ராணி நடித்திருந்தார்.

மேலும் நிக்கி கல்ராணியும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் ஆதியும் நிக்கி கல்ராணியும் காதலிப்பதாக அடிக்கடி தகவல் வெளிாகிக் கொண்டிருந்த நிலையில் கடந்த மாதம் நடிகர் ஆதிக்கும், நடிகை நிக்கி கல்ராணிக்கும் நிச்சயாதார்தம் முடிந்தது.

பல வருடங்களாக காதலித்து வந்த இருவரும், நிச்சையாதார்தத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.மேலும் இருவரின் நிச்சையாதார்த்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

அதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் எப்போது என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், வரும் மே 18ஆம் தேதி நிக்கி கல்ராணி - ஆதி திருமணம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கர்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement