ஸ்டூடியோவிற்கு வாடகை கொடுக்காமல் மும்பைக்குத் தப்பி ஓடிய இசையமைப்பாளர் அனிரூத்

115

தமிழ் திரையுலகின் பிசியான இளம் இசைமையப்பாளர்களில் ஒருவர் தான்அனிருத். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்தார் என்பதும் தெரிந்ததே.

இவர் தனுஷின் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார் என்று தான் கூற வேண்டும்.

இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், அடுத்தடுத்து அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இடம் பிடித்து விட்டார்.

மேலும் இவர் இசையில் தற்போது விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், பீஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உருவாகி வருகிறது.

தற்பொழுது கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்திற்கு இசையமைப்பதற்காக சென்னையில் மிகப்பெரிய ஸ்டுடியோ ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தான் அவரது இசையை கம்போஸ் செய்து வருகிறாராம். அந்த ஸ்டூடியோவிற்கு வாடகை மட்டும் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாயாம்.

அந்த ஸ்டுடியோவின் உரிமையாளர் துபாயில் உள்ள நிலையில் அனிருத் கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அனிரூத் முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த உரிமையாளர் நேரடியாகவே சென்னை வந்துவிட்டாராம். உரிமையாளர் சென்னை வந்த செய்தி அறிந்த இசையமைப்பாளர் மும்பைக்கு சென்று விட்டார் என கிசுகிசுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: