நிறைவுறும் குக் வித் கோமாளி ! மன உழைச்சலில் ரசிகர் ஒருவர் செய்த காரியம்

16070

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் குக் வித் கோமாளி 2 ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

வருகின்ற புதன்கிழமை இதன் கிராண்ட் பினாலே என நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்குழு தீர்மானித்து அதற்கான புரோமோ வீடியோக்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் வேளையில் இதன் இறுதிச்சுற்றுக்கு அஷ்வின்,பாபா,கனி,பவித்ரா,சகீலா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இந்நிகழ்வின் விருந்தினராக சிலம்பரசன், தீ மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்களும் வெளியாகி இருந்தது இந்நிலையில் ரசிகர் ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நீடிக்கக்கோரி கடிதம் ஒன்றினை விஜய் தொலைக்காட்சி முகாமையாளருக்கு எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில் அவர் ‘இந்நிகழ்ச்சியின் மூலமே தான் சிரிப்பதாகவும் இதன் மூலம் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை இழந்துள்ளதாகவும் இது முடிவடையவுள்ள செய்தி மனதை ஆழமாகப்பாதித்துள்ளதாகவும் cwc இன் அனைத்து ரசிகர்களும் cwc ஜ நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்’என குறிப்பிட்டுள்ளார்.