• Apr 18 2024

பிக்பாஸ் விக்ரமனுக்கு எதிராக எழும் புகார்கள்- விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபல்யமானவர் தான் விக்ரமன். இவர் தான் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில் கடையில் அசீம் டைட்டில் வெற்றி பெற்றது அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பலரும் ஏதாவது சர்ச்சையில் சிக்கியவர்களா? அவர்கள் மீது ஏதாவது கிரைம் ரேட் இருக்கிறதா? என தேடிப் பார்த்தே டிஆர்பிக்காக பிக் பாஸ் குழு அவர்களை போட்டியாளர்களாக மாற்றி வருவதாக கடும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விசிக கட்சியை சேர்ந்த விக்ரமன் வெற்றிப் பெற வேண்டும் அவருக்கு ஓட்டுப் போடுங்க என கடைசி நேரத்தில் அந்த கட்சியின் தலைவரான திருமாவளவன் போட்ட டுவிட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலரும் வெளிப்படையாகவே திருமாவளவன் டுவிட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசி நேரத்தில் பிக் பாஸ் டைட்டில் அசீமுக்கு செல்லவும் அந்த டுவிட் தான் காரணம் என சர்ச்சைகள் வெடித்தன.

இந்நிலையில், பெண் வழக்கறிஞர் ஒருவர் விக்ரமன் தன்னை காதலித்து திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி ஏகப்பட்ட பணத்தை அபகரித்து விட்டார் என்றும் அவரிடம் இதுபற்றி நியாயம் கேட்க சென்றபோது தனது சாதியை வைத்து இழிவாக பேசி சித்ரவதை செய்தார் என விசிக தலைவர் திருமாவளவனிடமே புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிக் பாஸ் விக்ரமனிடம் விசாரிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், அந்த கட்சியை சேராத 3 பெண் உறுப்பினர்களும் மேலும் 2 பேரும் சேர்ந்து விசாரணை நடத்த உள்ளதாக கூறுகின்றனர். 


பாதிக்கப்பட்ட அந்த பெண் வழக்கறிஞர் விக்ரமனுக்கு எதிரான ஆதாரங்களையும் அந்த குழுவில் சமர்ப்பித்து இருப்பதாகவும் இந்த விசாரணை முடிவில் விக்ரமனுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என பாதிக்கப்பட்ட அந்த பெண் வழக்கறிஞர் உறுதியாக உள்ள நிலையில், இதை அறிந்த பிக் பாஸ் ரசிகர்கள் விக்ரமனை சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர். சிலர், விசாரணை முடிவு வரட்டும் என இன்னமும் விக்ரமனுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement