சிபி மற்றும் ராஜு வைக் கட்டிப் போட்ட போட்டியாளர்கள்- அட இது தான் காரணமா?

136

தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கிய தொலைக்காட்சியான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 5 வது சீசன் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுவரை இந்த வீட்டை விட்டு 6 பேர் வெளியேறியுள்ளனர். இறுதியாக இசைவாணி வீட்டை விட்டு வெளியேறினார்.

இதில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அமீர் என்பவர் முதலில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் என்பது தெரிந்ததே. மேலும் பள்ளி காலத்தை நினைவூட்டும் பள்ளிக் கூட டாஸ்க் இன்றும் தொடர்ந்தது.

அத்தோடு இப் பள்ளிக் கூடத்தில் வாடர்ன் ஆக சிபியும் ஆசிரியர்களாக ராஜு ,அபிஷேக், அமீர் ஆகியோரும் மாணவர்களாக இமான் ,தாமரை, ஜக்கி பெரி, அக்ஷ்ரா, வருண், நிருப் ,அபிநய்,ப்ரியங்கா ஆகியோரும் இருந்தனர்.

இதில் வாடர்னாக இருந்த சிபியும் ஆசிரியர்களும் மாணவர்களை மிகவும் கட்டுப்பாட்டுடனும் தவறு செய்பவர்களுக்கு தண்டனையும் கொடுத்து வந்தனர். இதனால் மாணவர்களாக இருந்தவர்கள் எப் போது இந்த டாஸ்க் முடியும் என எதிர்பார்த்திருந்தனர்.

அந்த வகையில் இன்றைய தினம் இந்த டாஸ்க் நிறைவுற்றதால் சிபி மற்றும் ராஜுவின் கைகளைக் கட்டி ஓர் இடத்தில் இருத்தி பலவிதமான என்ரரெய்னர் சித்திரவதைகளைச் செய்ததோடு அவர்களை அடித்து சிரித்து மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.