மாநாடு படத்தை தனியாகச் சென்று பார்த்த தளபதி விஜய்யின் அப்பா- வைரலாகும் புகைப்படம்

298

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் சிம்பு. இவர் ஆரம்பத்தில் நடித்த பல படங்கள் ஹிட்டக் கொடுத்தன ஆனால் சமீபகாலமாகஇவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும்தோல்வியை சந்தித்து வருகின்றன.இவரது படங்கள் தோல்வியைச் சந்தித்து வந்தாலும். அவரது ரசிகர்கள் சிம்புவை விட்டுக்கொடுக்காமல் இன்னமும் அவருக்கு ஆதரவாக துணை நின்று வருகின்றனர் .

அத்தோடு சிம்பு நடிப்பில் மாநாடு என்னும் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்கியிருப்பதோடு சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதோடு மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளர்.

இப்படம் இன்று காலையில் திரையரங்கில் வெளியாகும் வரை பல தடைகளை கடந்து தான் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று இப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இதன்பின் தடைகளை கடந்து இன்று காலை 8 மணி முதல் இப்படம் வெளியானது.

இந்நிலையில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள மாநாடு திரைப்படம் வசூலில் மிக பெரியளவில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாநாடு படத்தை தளபதி விஜய் தந்தையான SA சந்திரசேகர் திரையரங்கில் பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் ரசிகர்களிடையே பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.