• May 29 2023

பிரபல நடிகரை அடிக்க பாய்ந்த காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ்..நடந்தது என்ன..?

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக காலுான்றி வருபவர் வைகைப்புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவை சுற்றிலும் சக காமெடி நடிகர்களான போண்டாமணி, பெஞ்சமின், முத்துக்காளை, சாரப்பாம்பு உள்ளிட்டோர் இருந்த நிலையில் வடிவேலுவின் காமெடி கை கொடுத்தது.

இவ்வாறுஇருக்கையில்  நடிகர் வடிவேலு தனது கூட இருக்கும் காமெடி நடிகர்கள் வளர்ந்து விடக்கூடாது என்று கருத்துவாராம். இதனால் பல நடிகர்கள் வடிவேலுவை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில்,  ஆரம்பத்தில் இருந்து விஜயகாந்தும் வடிவேலுவும் நல்ல நட்புடன் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை வடிவேல் கண்டபடி விமர்சித்தார்.

அதில் இருந்து எனக்கு வடிவேலுவை எனக்கு பிடிக்காமல் போனது. இதுகுறித்து அடுத்த நாளே வடிவேலுவிடம் கேட்டு எச்சரித்தேன்.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் விஜயகாந்த் கையால் சாப்பிட்டிருக்கேன் என்னை போல் அவரால் நிறைய பேர் பலடைந்திருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement