காமெடி நடிகர் சதீஷின் படத்தில் பிரபல இசையமைப்பாளர் -இவர் என்றால் சூப்பர் தான்

149

தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாது தற்பொழுது கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகின்றார்.நடிகர் சதீஷ் கடந்த 2019ஆம் ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு 2020 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

மேலும் இவர் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதையும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப் படத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார். திகில் மற்றும் காமெடி திரைப்படமான இந்த திரைப்படத்தில் சன்னி லியோன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

அத்தோடு இந்த படத்துக்கு நாய் சேகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது ஒரு பாடலுக்கு அனிருத் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். சதீஷுடனான நட்புக்காக இதை அனிருத் செய்ய ஒப்புக்கொண்டுள்ளாராம். இதனால் சதீஷ் ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.