• Apr 20 2024

தீபாவளியன்று தெறிக்கவிடப்பட்ட சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்-வெளியான வசூல் விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரின்ஸ். இப்படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார். சத்தியராஜ் இவர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் அனுதீப் குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை  டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸானது.

மேலும் இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது.இப்படம் ரசிகர்களிடம் குறிப்பாக 2கே கிட்ஸ் என்று அழைக்கப்படுபவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவ்வாறுஇருக்கையில்  தீபாவளியன்று நேற்று மட்டும் பிரின்ஸ் படம் தமிழகத்தில் ரூ 6 கோடி வசூல் செய்ய, தமிழகத்தில் 25 கோடி உலகம் முழுவதும் இப்படம் ரூ 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.



Advertisement

Advertisement

Advertisement