• Apr 25 2024

சண்டையின் உச்சகட்டம்-முதல் குறும்படம் வெளியானது...காலில் விழுவார்களா போட்டியாளர்கள்?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல் குறும்படம் வெளியாகுமென்று நெட்டிசன்கள்  கூறிவருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது 3வாரம் இடம்பெறுகின்றது.பிக்பாஸ் வீட்டில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது இரண்டு போட்டியாளர்கள் வெளியாகி 19 போட்டியாளர்களே உள்ளார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து போட்டிகளும் சூடுப்பிடித்து வருகின்றது.

எனினும் குறிப்பாக தனலட்சுமி மிகவும் வைலண்ட் ஆக விளையாடுகிறார் என்று பலர் குற்றம்சாட்டி அவரை ஓரம் கட்டியுள்ளனர். “அசீம்தான் அனைவரையும் தள்ளிவிட்டு டால் எடுத்தார். நான் யாரையும் தள்ளிவிடவில்லை. அப்படி நான் தள்ளிவிட்டு கீழே விழுந்து விட்டார்கள் என்று என் மீது பழி சுமத்தினால், கமல் சார் குறும்படத்தை போடட்டும். அப்படி நான் யாரையாவது தள்ளிவிட்டு கீழே விழுந்ததாக அதில் இருந்தால் நான் அனைவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். அவ்வாறு நடக்கவில்லை என்றால் அனைவரும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தனலட்சுமி கூறினார்.

இவ்வாறுஇருக்கையில் இந்த நிலையில் நெட்டிசன்கள் தற்போது இந்த டாஸ்க்கின் வீடியோவை வெளியிட்டு தவறு யார் மேல் என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த வீடியோவில் ஷெரின் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருமே ஒரே நேரத்தில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுகிறார்கள்.



தனலட்சுமி உடனே எழுந்து மீண்டும் தனது முயற்சியை  ஆரம்பிக்கிறார். ஆனால் ஷெரின் தலையில் காயம் அடைந்ததை போல் கத்துகின்றார். இதன் பிறகு தான் அசீமுக்கும் தனலட்சுமிக்கும் சண்டை வருகிறது.  இந்த குறும்படத்தினை ரசிகர்கள் வெளியிட்டு இந்த வாரம் பிக் பாஸில் முதல் குறும் படம் வெளியாகும் என்று தெரிவித்து வருகின்றனர்.




 

Advertisement

Advertisement

Advertisement