• Mar 29 2024

சென்னை... ஹைதராபாத் செல்லும் லியோ படக்குழு..! கிடைச்சாச்சு வேற லெவல் New அப்டேட்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

 இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ப்ரியா ஆனந்த், அர்ஜுன் சர்ஜா, சஞ்சய் தத் மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த வாரம் மிஷ்கின் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படம் ஆக்கப்பட்டு முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சஞ்சய் தத் , அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எங்கெல்லாம் நடைபெறப்போகிறது என்ற தகவல்  கிடைத்துள்ளது. 

அதன்படி, லியோ படப்பிடிப்புகாஷ்மீர் அட்டவணை மார்ச் 25 ஆம் தேதியுடன் முடிவடையும். பிறகு சென்னையில் 10 நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளி அதன் பிறகு ஹைதராபாத்தில் 15 நாட்கள் படப்பிடிப்பு மே மாதத்துக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, 


Advertisement

Advertisement

Advertisement