தமிழ் சினிமாவில் மாதவன், பிரசாந்த், அப்பாஸ் ஆகியோருக்கு பிறகு சாக்லேட் பாய் என்கிற அந்தஸ்தை பெற்ற ஹுரோ தான் ஹரிஸ் கல்யான். இவர் சிந்த சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியே ஆகும்.இதில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியதோடு வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடிக்கவும் ஆரம்பித்தார்.
இளம்பெண்களின் மனதில் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது.இந்தத் திருமணத்தில் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின்ஸும், அவரின் நெருங்கிய தோழிகள் சிலரும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் நடிகைகள் அதுல்யா ரவி, இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் நடிகை பிந்து மாதவி ஆகியோர் நேரில் வந்து ஹரிஷ் கல்யாணை வாழ்த்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!