பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐக்கி பெர்ரி என்ன கூறியுள்ளார் என்று பாருங்க- வைரலாகும் வீடியோ

705

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 4 சீசன்கள் வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. ரசிகர்களை பெரிதாக கவர்ந்த நிலையில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி பிக்பாஸின் 5-ஆம் சீசன் கோலாகலமாக ஆரம்பித்து தற்போது 56வது நாட்களைக் கடந்துள்ளது.

இந்நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் கொரோனாத் தொறறினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக நிகழ்ச்சியினை ரம்யா கிருஷ்னன் தொகுத்து வழங்குகிறார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி, குறைந்த வாக்குகளை பெற்ற போடியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றதன் காரணமாக ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டார்.

தஞ்சாவூரை சேர்ந்த ஐக்கி பெர்ரி, பாப் பாடகி ஆவார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவரின் ரசிகர் வட்டம் பெரிதாகி உள்ளது. இந்நிலையில், பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் அப்போது பிக்பாஸ் குறித்து ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விக்கு பதிலளித்த அவர், ரசிகர்கள் காட்டிய அன்பால் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ரசிகர்களின் இத்தகைய லவ்வுக்காக தான் ரொம்ப நாள் ஏங்கி இருந்ததாகவும், பிக்பாஸ் மூலம் அது கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்ததாகவும் ஐக்கி தெரிவித்தார். இவர் பேசிய வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.