• Apr 19 2024

சின்னத்திரைக்கு வந்த ஆரம்பத்தில் அசீம் மற்றும் ரச்சிதா எப்படி இருந்துள்ளார் என்று பாருங்க- வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது அடுத்த மாதம் முடிவடையும் என்று நம்பப்படுகின்றது.

மேலும் 70 நாட்களை அண்மித்த இந்த நிகழ்விலிருந்து தற்பொழுது 11 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.வெளியேறியவர்கள் அனைவருமே மக்களால் தேர்வு செய்து வெளியேற்றப்பட்டவர்கள் தான். இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை.


ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று மாறி மாறி ஓட்டுபோட்டு வருகிறார்கள்.பிக்பாஸ் ஆரம்பித்ததில் இருந்து அதில் போட்டிபோடும் பிரபலங்கள் பற்றி நிறைய விஷயங்கள் வெளியாகி வருகின்றன. 

அப்படி நடிகை ரச்சிதா மற்றும் நடிகர் அசீம் இருவரும் சினிமாவிற்குள் நுழையும் போது எப்படி இருந்தார்கள் என்ற புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.அதைப்பார்த்த ரசிகர்கள் அட ரச்சிதா மற்றும் அசீமா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement