• Apr 01 2023

'சந்திரமுகி 2 படத்தில் இணைந்து மற்றுமொரு பிரபல மலையாள நடிகை- அடடே இவரும் நடிக்கிறாரா?

stella / 1 month ago

Advertisement

Listen News!


நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு மைசூரில் பூஜையுடன் துவங்கியது. 'சந்திரமுகி 2'  திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

இப்படத்தினை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு & தோட்டா தரணி கலை இயக்குனர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.


ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும்  சந்திரமுகி 2 படத்திற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது உடலமைப்பை மாற்றிய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.இப்படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரபல மலையாள நடிகை மஹிமா நம்பியார் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.இது தொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் மஹிமா நம்பியார் பகிர்ந்துள்ளார்.


 அதில், "திறமை மிகுந்த  அற்புதமான மனிதரான லாரன்ஸ் மாஸ்டருடன் பணிபுரிந்த அனுபவம் அற்புதமானது. இந்த சந்திரமுகி- 2 படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  திரையில் படத்தினை காண காத்திருக்க முடியாது!! நன்றி இயக்குநர் வாசு சார்." என ராகவா லாரன்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மஹிமா நம்பியார் ட்வீட் செய்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement