• Apr 23 2024

திரைக்கு வருகிறது 'சந்திரமுகி-2'... அதுவும் எப்போ தெரியுமா...? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சுமார் 500 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை செய்த திரைப்படம் தான் ‘சந்திரமுகி 2’.இப்படத்தினை பி.வாசு இயக்கியிருந்ததோடு  இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், மாளவிகா, வினீத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


இதனையடுத்து தற்போது இதன் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. அந்தவகையில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி வருகின்றது. மேலும் ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


இந்நிலையில் இப்படத்தின் உடைய 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில காட்சிகளே மீதியுள்ளன. இதனால் இறுதிகட்டப் படப்பிடிப்பை 10 நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு ஜூன் மாதம் முதல் போஸ்ட் புரொடக்சன் பணிகளை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.


ஆகவே இப்படத்தை வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. அத்தோடு இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement