• Apr 25 2024

வாய்ப்பு இல்லை வாய்க்கொழுப்பு அதிகம்; தல, தளபதியுடன் நடிக்க மறுத்தாரா சாய்பல்லவி?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய்யுடன்  ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என பல நடிகைகள் காத்து கிடக்கிறார்கள்.அப்படிதான் விஜய்யுடன் நடிப்பது தன்னுடைய வாழ்நாள் கனவு என்று கூறிய ராஷ்மிகா விஜய்யின் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வாரிசு படத்தில் நடித்திருந்தார். 

இந்த சூழலில் பிரபல நடிகையான சாய்பல்லவி மட்டும் விஜய்யுடன் நடிக்க மறுத்து விட்டாராம். பொதுவாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் சாய்பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.


 நடிப்பு, நடனம் என அனைத்திலும் சாய்பல்லவி பட்டைய கிளப்ப கூடிய சாய்பல்லவியுடன் நடிக்கவும் பல நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு காலகட்டத்தில் சாய்பல்லவி, விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இப்போது விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு வேண்டாம் என்று உதாசீனப்படுத்தி விட்டாராம். அதாவது நான் நல்ல கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்புகிறேன். பெரிய நடிகர்களுடன் நடித்தால் ஹீரோயின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது.அதுமட்டுமின்றி அரைகுறை ஆடையுடன் பாடலில் ஆட சொல்வார்கள் என விஜய் பட வாய்ப்பை மறுத்துவிட்டாராம். 


அதேபோல் தான் அஜித்தின் வலிமை படத்திலும் முதலில் சாய் பல்லவியை நடிக்க வைக்க படககுழுவினர் முடிவு செய்திருந்தார்கள். அந்தப் பட வாய்ப்பையும் சாய் பல்லவி மறுத்துவிட்டார். இதை அறிந்த ரசிகர்கள் சாய் பல்லவிக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் வாய்க்கொழுப்பு அதிகம் என கிண்டல் அடித்து பேசுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement