• Apr 24 2024

குழந்தையோடு குழந்தையாய் மாறிய சைத்ரா ரெட்டி... வாவ் என்ன ஒரு அழகு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்றான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற சீரியலின் மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சைத்ரா ரெட்டி. இருப்பினும் இவர் அதிகம் பிரபலமானது என்னவோ ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய 'யாரடி நீ மோகினி' என்ற சீரியலின் வாயிலாகத் தான்.


இந்த சீரியலில் ஸ்வேதா என்ற வில்லி கேரக்டரில் அவர் அசத்தலாக நடித்து மிரட்டி இருப்பார். இதனால், அவருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகளவான வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாது சைத்ரா ரெட்டி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். 


அந்தவகையில் கயல் என்ற பெண் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய எப்படி தினமும் போராடுகிறாள் என்பதே இந்த சீரியலின் உடைய மையக்கதை. அவரது அமைதியான காதலன் எழிலரசனாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார்.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் தோன்றி வருகின்றார். அந்தவகையில் சைத்ரா அஜித்தின் 'வலிமை' படத்தில் லதா ரோலில் நடித்து இருந்தார். அப்படத்தில் அவர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரது நடிப்பிற்காக ரசிகர்கள் மத்தியில் பெருமளவான வாழ்த்துக்களை பெற்றார். 


அதுமட்டுமல்லாது சிபி ராஜ், ஆண்ட்ரியா நடித்து ஓடிடியில் வெளியான 'வட்டம்' என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இவ்வாறாக நடிப்பில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகின்ற சைத்ரா ரெட்டி சமூக வலைத்தங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.

அந்தவகையில் இவர் தற்போதும் ஒரு குழந்தையுடன் இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடி அதனைப் புகைப்படமாக எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். அப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement

Advertisement