மன அழுத்தத்தால் அவதிப்படும் பிரபல நடிகை- விரைவில் திருமணமாம்

708

அயன், வீரம், தர்மதுரை, படிக்காதவன், வேங்கை, தேவி, ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்து. முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் நடிகை தமன்னா. கார்த்திக்குடன் பையா, சிறுத்தை படங்களில் நடித்தார்.

இவர்களுடைய ஜோடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. தமன்னா தமிழில் கடைசியாக விஷாலுடன் சேர்ந்து ஆக்ஷன் படத்தில் நடித்தார். பின் தமிழில் சரியான வாய்ப்புக்கள் அமையாததால் தெலுங்கு இந்தி சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பி விட்டார்.டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் நவம்பர் ஸ்டோரி என்ற வெப் தொடரிலும் நடித்தார்.

ஜெமினி டிவியில் ‘மாஸ்டர் செஃப்’ தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தமன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் மன அழுத்தத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

எதனால் மன அழுத்தம் ஏற்பட்டது என்பதை வெளிப்படையாக கூறவில்லை. தமன்னாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தற்போது ஆர்கானிக் உணவுகளை சாப்பிட்டு வருகிறாராம். தமன்னா விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக உள்ளாராம். அடுத்த ஓராண்டுக்குள் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.