• Apr 20 2024

வயதைப் பார்க்காது திருமணம் செய்த பிரபலங்கள்.. அடேங்கப்பா நஷ்ரியாக்கும் கணவருக்கும் இத்தனை வயது வித்தியாசமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகைப் பொறுத்தவரையில் ரீல் ஜோடிகளாக நடிப்பவர்கள் நிஜத்திலும் ரியல் ஜோடிகளாக மாறிய சம்பவங்கள் பல உண்டு. பொதுவாகவே காதலுக்கு மனசு தான் முக்கியம் வேற எதுவும் தேவையில்லை என்று கூறுவார்கள். இது எத்தனை பேருடைய வாழ்க்கைக்குப் பொருந்துமோ தெரியவில்லை. ஆனாலும் நிஜ வாழ்க்கையில் காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதனை ஒரு சில சினிமா ஜோடிகள் நிரூபித்து இருக்கின்றனர். 

அவர்கள் யார் யார் என்பது குறித்துப் பார்ப்போம்.

அந்தவகையில் கோலிவுட் தொடக்கம் பாலிவுட் வரை தேவதை போல் வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரைத் திருமணம் செய்து கொள்ள ஏராளமான பிரபலங்கள் போட்டி போட்டனர். ஆனால் இவரோ தன்னைவிட எட்டு வயது பெரியவரான பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.


போனிகபூர் ஏற்கெனவே திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர். அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு தற்போது இரு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒருவரான ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஹீரோயினாக நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக பிக்பாஸ் பிரபலமான சினேகனை எடுத்துக் கொண்டால், தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை எழுதி இருக்கும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். எட்டு வருடங்களாக நடிகை கன்னிகாவை காதலித்து வந்த சினேகன் சில வருடங்களுக்கு முன்பு தான் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். கன்னிகா சினேகனை விட 16வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் தமிழில் 'இயற்கை' திரைப்படத்தில் நடித்து பிரபலமான குட்டி ராதிகா ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிகையாக இருக்கும் போதே தன்னைவிட 27 வயது பெரியவரான கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் இவருக்கு வெறும் 20வயது மட்டும் தானாம். எது எவ்வாறாயினம் இந்தத் தம்பதியினருக்கு தற்போது ஒரு குழந்தையும் உண்டு.


இவர்களைப் போலவே தமிழில் துரு துரு கேரக்டர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. இவர் மிகச்சிறு வயதிலேயே நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 12 வயது வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகின்றது.


அதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா பல வருடங்களாக திருமணம் செய்யாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இவர் தன்னை விட 17 வயது சிறியவரான சாயிஷா மீது 'கஜினிகாந்த்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது காதலில் விழுந்தார். அதன் விளைவாக சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது.


இவ்வாறாக பல திரைப் பிரபலங்களும் காதலுக்கு கண் இல்லை என்பதைப் போல் வயது வேறுபாடின்றி திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement