• Sep 22 2023

ஒரே நாளில் தமிழ்நாட்டில் சாதனை படைத்த கேப்டன் மில்லர் டீசர்! மகிழ்ச்சியில் படக்குழு..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜான் கொக்கன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். 

இந்தப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த மாத இறுதியில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. கையில் துப்பாக்கியுடன், வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் இந்த போஸ்டரில் மிரட்டியிருந்தார்.

இதனிடையே இந்தப் படத்தின் டீசர் நேற்றைய தினம் அவரது பிறந்தநாளையொட்டி நள்ளிரவு ரிலீஸ் செய்யப்பட்டது. சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவற்றிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படமும் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்தப் படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியான நிலையில், ஒரே நாளில் டீசர் 23.1 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் பெற்றுள்ளது. தமிழகத்தில் இந்த சாதனையை புரிந்த முதல் படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மாஸ்டர் படம் 20 மில்லியன் வியூஸ்களையும் சர்க்கார் 14.9 மில்லியன் வியூஸ்களையும் பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் மற்றும் மிரட்டும் வகையில் கேப்டன் மில்லர் டீசர் அமைந்துள்ளது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.




Advertisement

Advertisement

Advertisement