• Sep 26 2023

பாக்கியாவிடமிருந்து பறிபோன கான்டீன் வேலை- மோசமாக திட்டிப் பேசிய ராதிகா- அழுது மன்னிப்புக் கேட்கும் செல்வி- Baakiyalakshmi Serial

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா இனியவின் நண்பர்களுடன் இருந்து காலேஜில் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது இனியவின் ப்ரெண்ட் பாக்கியாவிடம் தானும் ஒரு பையனும் சின்ன வயசில இருந்து ஒன்றாகப் படிச்சோம். இப்போ காலேஜ் வந்ததில் அவன் வேற காலேஜ் நான் வேற காலேஜ், அதனால் அவனும் நானும் அடிக்கடி பார்த்துக் கொள்ள முடில, அவன் என்னை லவ் பண்ணுறேன் என்று சொல்லுறான் என்று சொல்கின்றார்.


அப்போது பாக்கியா திடீரென இரண்டு பேரும் பிரிஞ்சு போய் படிக்கிறதால அவன்  உன்னை ரெம்ப மிஸ் பண்றான். அது தான் லவ் என்று சொல்கின்றான். நீ அவன் கிட்ட பேசி புரிய வை, அப்பிடிப் புரிஞ்சுக்கல என்றால் விலகி நடந்துக்கோ என்று அட்வைஸ்ட் கொடுக்கின்றார். பாக்கியாவின் அட்வைஸ்டைக் கேட்ட இனியா பாக்கியாவைப் பாராட்டுகின்றார்.

மறுபுறம் செல்வியின் கணவர் குடித்து விட்டு மகனுக்கு அடிப்பதால் செல்வி சமையலில் கவனம் செலுத்தாது கணவர் கிட்ட போனில் பேசிடடு இருக்கிறார். அத்தோடு கணவரைத் திட்டுகின்றார். நீ இல்லாமல் போய்ட்டா நான் தாலிய அறுத்திட்டு நிம்மதியாக இருப்பேன் என்று சொல்லி பேசிட்டு இருக்கிறார் .


செல்வி இவ்வாறு கணவருடன் சண்டை பிடிப்பதைப் பார்த்த ஏனையவர்களும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதோடு சமையலை ஒழுங்காக செய்யாமல் ஏனோதானோ என்று செய்கின்றனர். பின்னர் பாக்கியா ஸ்போக்கின் இங்கிலிஸ் கிளாசில் இருக்கும் போது செல்வி போன் பண்ணி உடனடியாக வரச் சொல்ல பாக்கியாவும் போகின்றார். அப்போது அங்கே ராதிகா பாக்கியாவைத் திட்டுகின்றார்.

உங்கட சாப்பாட்டை சாப்பிட்டவங்க காறித் துப்பிட்டு போறாங்க, அவ்வளவு உப்பு சாப்பிடவே முடில, என்ன பண்ணி வைச்சிருக்கிறீங்க,சமையல் வேலை பார்க்கிறதுக்கு நிறைய பேர் இருக்கிறாங்க உங்க கிட்ட கொடுத்தோம் பாரு, இனிமேல் உங்களுக்கு கான்டீனில் இடம் இல்லை நாங்க வேற யாரையாவது போட்டுக் கொள்ளுறோம் என்று சொல்ல பாக்கியா அப்படியெல்லாம் செய்திடாதீங்க  என்று கெஞ்சுகின்றார்.


இருந்தாலும் இதைக் கேட்ட ராதிகா பாக்கியாவைத் திட்டி விடடு செல்கின்றார். இதனால் பாக்கியா செல்வியைத் திட்டுகின்றார். இந்த கான்டீன் ஆடர் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம். அதெல்லாம் போச்சே, நான் இங்க இருந்திருக்கோனும் என்று புலம்பி அழுகின்றார். இதைக்கேட்ட பழனிச்சாமி ஆறுதல்ப்படுத்துகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement