• Dec 07 2022

ப்பா இப்படி பாடுறாங்களே பிருந்தா சிவகுமார்..வைரலாகும் வீடியோ

Listen News!
lathushan / 1 month ago
image
Listen News!

பிருந்தா, நடிகர் சிவக்குமாரின் மகள். சூர்யா, கார்த்தியின் அன்புத் தங்கையும் ஆவார். மேலும் இவர் பின்னணிப் பாடகியும் ஆவார். அதுமட்டுமல்லாமல் `செங்காட்டுல’ என்ற கிராமத்து மணம் வீசும் ஆல்பம் ஒன்றில் பாடியும் நடித்தும் இருக்கிறார் பிருந்தா.


அதுமட்டுமல்லாமல்  அப்பா சிவகுமாரில் தொடங்கி, அண்ணன்கள் சூர்யா, கார்த்தி, அண்ணி ஜோதிகா என அனைவரும் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர்கள் தான்.


இதனால் பிருந்தாவும் மக்களால் உடனே அடையாளம் காணப்பட்டார். ஆனாலும் அவர்களின் உதவி இல்லாமல் தனது முயற்சியால் பாடல்கள் பாட வேண்டும் என்ற ஆசையில் முயற்சி செய்து வந்துள்ளார்.


முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில் 2018ம் ஆண்டு வெளிவந்த சந்திரமௌலி படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். மேலும் அடுத்தடுத்து என இதுவரை 5 படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.


இப்போது சினிமாவில் பாடகியாக, டப்பிங் கலைஞராக வளர்ந்து வரும் பிருந்தாவிற்கு 2005ம் ஆண்டு சிவகுமார் என்ற கிரானைட் தொழில் செய்பவருடன் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் தனது அருமையான குரலால் பாடல் ஒன்றை பாடி இணையத்தில் பதிவு செய்துள்ளார் பிருந்தா.