• Apr 25 2024

பாத்ரூமில் பிரபல பாலிவுட் நடிகர் மர்ம மரணம்...! போலீசார் தீவிர விசாரணை..! நடந்த பின்ணணி என்ன?

Jo / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் மாடலான ஆதித்யா சிங் ராஜ்புத் நேற்று இரவு பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 32. மும்பையில் உள்ள அந்தேரி லோகண்ட்வாலாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஆதித்யா சிங் பாத்ரூமில் மயங்கி கிடப்பதை பார்த்த அவரின் வீடு பணிப்பெண், வீட்டின் வாட்ச்மேன் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக அவரின் உடல் கூப்பர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவருடன் நண்பர் ஒருவரும் தங்கியிருந்துள்ளார். 

நண்பர் கூறுகையில்  ஆதித்யா  சிங் கடந்த இரண்டு நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கை போலீசார் தற்போது விசாரித்து வருகிறார்கள். ஆதித்யா சிங் அளவுக்கு அதிகமாக போதை பொருள் உட்கொண்டதால் இந்த மரணம் நேர்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் என தெரிவித்தனர். 

ஆதித்யா சிங்குடன் அறையில் தங்கியிருந்த நண்பர் மற்றும் வேறு சில நண்பர்களுடன் முதல் நாள் பார்ட்டி கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்களை கூட சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் ஆதித்யா. மறுநாள் பிற்பகல் அவருக்கு வாந்தி வருவது போல இருப்பதால் பாத்ரூமுக்கு சென்றுள்ளார். 

அங்கு அவர் மயங்கி விழுந்து விழுந்ததாகவும் உடனே நண்பர், வாட்ச்மேன் மற்றும் பணிப்பெண் மூவரும் சேர்ந்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மூவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவரின் இறுதி சடங்கில் உறவினர்கள் மற்றும் போவுது பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

ஆதித்யா சிங் ஹோண்டா விளம்பரம் உட்பட 25க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். ஸ்ப்ளிட்ஸ்வில்லா 9, ஆவாஸ் சீசன் 9,பேட் பாய் சீசன் 4 மற்றும் அவர் லவ் போன்ற ஏராளமான ரியாலிட்டி ஷோ மற்றும் தொடர்களில் நடித்துள்ளார். மைனே காந்தி கோ நஹின் மாரா, கிராந்திவீர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement