• Apr 23 2024

துணிவு படத்தை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. வைரலாகும் பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர் என்றால் அது அஜித் தான். இவர் நடிப்பில் எந்தப் படம் வெளியானாலும் அந்தப் படத்திற்கு அமோக வரவேற்புக் கிடைத்து வருவது வழமை. இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 'துணிவு' திரைப்படம் தயாராகி இருக்கின்றது. இப்படமானது வருகிற பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கின்றது.


மேலும் போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்க இவர்களது கூட்டணியில் அஜித் நடித்துள்ள 3வது திரைப்படம் இது. இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் இப்படமானது முழுக்க முழுக்க வினோத் அவர்களின் கதையில் உருவாகி இருக்கிறது. 

அதுமட்டுமல்லாது இதுவரை வந்த போஸ்டர்களில் அஜித் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அத்தோடு பட ரிலீஸ் பொங்கலுக்கு என படக்குழு ஏற்கெனவே அறிவித்து விட்டார்கள். 


அந்தவகையில்  நேற்று மாலை இப்படத்தின் டிரைலர் வெளிவந்து தல ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. இந்நிலையில் துணிவு படத்தை ப்ளூ சட்டை மாறன் தாறுமாறாக கலாய்த்து இருக்கிறார். அதாவது "எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!!" என குறிப்பிட்டு Inside Man என்ற ஹாலிவுட் படத்தின் ட்ரைலரை பகிர்ந்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

எனவே துணிவு படம் அந்த படத்தின் சாயலில் இருப்பதாக தான் அவர் இப்படி விமர்சித்து இருக்கிறார். இவரின் இந்தப் பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement