• Feb 04 2023

வாரிசு ட்ரெய்லரை வைத்து மீம்ஸ் போட்டு ரசிகர்களை கடுப்பாக்கிய ப்ளூ சட்டை மாறன்- கெட்ட வார்த்தையால் திட்டி வரும் நெட்டிசன்கள்

Listen News!
stella / 4 weeks ago
image

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குநராக வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் வாரிசு. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, யோகிபாபு, ஷாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 தமன் இசையமைத்துள்ள இப்படமானது வரும் பொங்கலை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. யூடியூப்பில் வெளியான இந்த ட்ரெய்லர் சாதனை படைத்து வருகின்றது. அதேநேரத்தில் வாரிசு ட்ரெயிலர் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.


பல படங்களின் காப்பியாக வாரிசு திரைப்படம் உள்ளது என்றும் படம் ஸ்லோவாக இருப்பது போல் தெரிகிறது என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் படம் ஃபேமிலி எண்டெர்டெயினர், குடும்பத்தோடு பார்க்கலாம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் திரைப்பட இயக்குநரும் யூட்யூப் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன், மீம்ஸ் போட்டு வாரிசு பட ட்ரெயிலரை கலாய்த்துள்ளார். பிரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றிருக்கும் வடிவேலுவின் கடிகார காமெடி ஸ்டில்லை பயன்படுத்தி 'அப்பாடா.. நான்கூட புதுசுன்னு நெனச்சி பயந்துட்டங்க' என அஜித் ரசிகர்கள் கூறுவது போல் உள்ள மீம்ஸை ஷேர் செய்துள்ளார்.


ப்ளூ சட்டை மாறனின் இந்த டுவிட்டை பார்த்த நெட்டிசன்கள், விஜய் நம்பர் ஒன் அவரை இப்படி அசிங்கப்படுத்தலாமா என கேட்டு வருகின்றனர். ப்ளூ சட்டையின் இந்த டுவிட்டை பார்த்த அஜித் ரசிகர்களும் கடுப்பாகியுள்ளனர். சண்டை போடுவதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க என ப்ளூ சட்டை மாறனை கழுவி ஊற்றி வருகின்றனர். விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் சண்டை மூட்டி விட்டு ப்ளூ சட்டை மாறன் குளிர் காய பார்க்கிறார் என சிலர் கெட்ட வார்த்தையிலும் அவரை திட்டி தீர்த்து வருகின்றர்.


Advertisement

Advertisement

Advertisement