• Dec 02 2022

பிகில் திரைப்பட நடிகைக்கு இனிதே நிறைவு பெற்ற திருமணம்-வைரலாகும் புகைப்படம்..!

Listen News!
Aishu / 2 months ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழும் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில்.

பெண்கள் கால்பந்து குறித்த திரைப்படம் பிகில் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வரவேற்பை ஈட்டியது.

அப்படத்தில் விஜய்யுடன் பல நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். அதில் சிலர் தற்போது கதாநாயகிகளாகவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இப்படத்தின் மூலம் பிரபலமானாவர் நடிகை காயத்ரி ரெட்டி, இவர் இப்படத்திற்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.


இவ்வாறுஇருக்கையில்  தற்போது காயத்ரி ரெட்டி திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரின் திருமண புகைப்படத்தை பதிவிட்டு, தனது கணவரை அறிமுகம் செய்து வைப்பதாக பதிவிட்டுள்ளார்.

இதோ அவரின் புகைப்படங்கள்