• Apr 20 2024

பிக்பாஸ் விக்ரமன் செய்த மாஸான விடயம்- மக்களிடம் இருந்து கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

மேலும் இந்த வீட்டிலிருந்து முதலாவதாக சாந்தி மாஸ்டர் எலிமினேட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஜிபி முத்து தன் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து போன வாரம் அசல் கோலாறு வெளியேறினார்.


இந்நிலையில் தற்போது பிக்பாஸில் டாஸ்க் ஒன்று நடந்து வருகிறது, அதில் விக்ரமன் சுத்தம் செய்யும் நபர்கள் குறித்து விழிபுணர்வு ஏற்படுத்தும் வகையில் நடித்திருக்கிறார்.அவர் செய்த அந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் தனது கருத்துக்களை பயப்படாது முன்வைக்கும் போட்டியாளராக விக்ரமன் வலம் வருகின்றார். இதனால் இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதி வரை செல்வார் என்றும் ரசிகர்களால் நம்பப்படுகின்றது.



Advertisement

Advertisement

Advertisement