• Apr 18 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்-தமிழக அரசிற்கு பறந்த கடிதம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் 18வது நாளை எட்டியுள்ளது. கடந்த இரு வாரங்களை சிறப்பாக முடித்து  தற்போது 3வது வாரம் இடம்பெறுகின்றது.

இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்துக் கொள்ளும் அதேவேளையில் போட்டியென்று வந்துவிட்டால் எதையும் விட்டுக் கொடுக்காத மனநிலையில் செயல்பட்டு வருகின்றனர்.இதில் அசல் கோளாறு உட்பட சில போட்டியாளர்கள் எல்லை மீறி வருகிறார்கள்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலாச்சார சீரழி நடப்பதாக கூறி அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது. 

அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா வெளியிட்டுள்ள அறிக்கை :

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கி இன்னும் முன்று வாரம் கூட சரியாக முடிவடையாத நிலையில், சில போட்டியாளர்கள் இடையே காதல் கதை தொடங்கியுள்ளது. இந்த முறை பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். போட்டியாளர்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு இடையில் உள்ள… கருத்து வேறுபாடுகளும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.போட்டியாளர் அசல் கோலார்… இவர் குயின்சியின் கையை பிடித்துக்கொண்டு செய்த செயலால் வீடியோவில் சிக்கினார்.

மேலும், மைனா நந்தினி, ஜனனி ஆகியோரையும் அசல் எல்லை மீறித் தொட்ட வீடியோக்களை சமூகவலைதளங்களில் பரப்பி, அசலின் அத்துமீறால் தொடர்பாக கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.இவ்வாறுஇருக்கையில் , நிவா – அசல் ஆகியோரிடையே காதல் உருவாகி, அவர்கள்  அத்துமீறி நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. அத்தோடு தமிழக கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில், சண்டை, சச்சரவு காட்சிகள் அதிக அளவில் நாளுக்கு நாள் பிக்பாஸ் சீசன் 6-ல் இடம் பெற்று வருகிறது. நிகழ்ச்சி என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் நினைத்து கொண்டு இருக்கிறது.

சமுதாய சீர்திருத்தம் என்பது அனைவரும் பொறுப்பு உள்ளது. அmத்தோடு அந்த சமூக பொறுப்பை உணர்ந்து விஜய் தொலைக்காட்சி குழுமம் செயல்பட வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கேட்டு கொள்கிறேன். எனினும் அதே நேரத்தில் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளால் குழந்தைகளிடையே தவறான எண்ணத்தை விதைக்க முற்படும் செயலுக்கு தடை விதிக்கும் வகையில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் எனவும் தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்,’’

என்று அந்த அறிக்கையில் ஜிஜி சிவா குறிப்பிட்டுள்ளார். 




Advertisement

Advertisement

Advertisement