• Jun 03 2023

திடீரென வீங்கிய முகத்துடன் கதறி அழும் புகைப்படத்தை பதிவிட்ட பிக்பாஸ் ரைசா- என்னாச்சு இவருக்கு- கடும் குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ரைசா வில்சன். மாடல், நடிகை என வலம் வரும் இவர் பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். அவருடன் ஜோடி போட்டு அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.


அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விஷ்ணு விஷாலுடன் FIR படத்திலும் நடித்துள்ளார்.ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


இந்த நிலையில் முகம் வீங்கியபடி அழுது கொண்டே புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னாச்சு என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement