• Mar 29 2024

'லியோ' படத்தில் நடிக்க வைத்தமைக்கு நன்றி தெரிவித்த பிக்பாஸ் ஜனனி... என்ன கதாபாத்திரம்..? அவரே வெளியிட்ட ட்விட்டர் பதிவு..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது 'லியோ' திரைப்படம் தயாராகி வருகின்றது. மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் உடைய வசூல் சாதனைக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. 


இப்படத்தில் பெரிய திரைப் பிரபலங்கள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்களும் நடிக்கின்றனர். அந்தவகையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்ட இலங்கைப் பெண் ஜனனியும் லியோ படத்தில் நடிப்பதாக ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது.


இந்நிலையில் தற்போது ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலமாக ஜனனி அதனை உறுதி செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர் "லியோ படத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி, மேலும் விஜய் சார் எனக்கு ரொம்ப முக்கியமானவர்..." என குறிப்பிட்டுள்ளார்.


எனவே இந்தப் பதிவின் மூலமாக லியோ படத்தில் ஜனனி நடித்தது ரசிகர்கள் மத்தியில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து "லியோ படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடித்தீர்கள்" என ரசிகர்கள் பலரும் கேள்விகளுக்கு மேல் கேள்வியெழுப்பி வருகிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement