• Apr 25 2024

'ரஞ்சிதமே' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம்... அடடே ராஷ்மிகாவையே அடிச்சிற்றாங்களே...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் காலடி வைப்பதற்கு முன்னர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஒருவரே ஷிவானி. பின்னர் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.


அந்தவகையில் ஷிவானி நடிப்பில் முதன்முதலாக வெளிவந்த படம் என்றால் அது 'விக்ரம்' தான். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார் ஷிவானி.

குறிப்பாக இப்படத்தில் அவர் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும், அவரின் நடிப்பிற்கு பலத்த பாராட்டுக் கிடைத்திருந்தது. அந்த அளவுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இவருக்கு உள்ளது.


விக்ரம் படத்தினைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய 'வீட்ல விசேஷம்' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடி அனைவரையும் கவர்ந்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பில் பம்பர் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் மூலம் முதன்முதலாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.


இந்நிலையில் தற்போது இவர் விஜய்யின் 'ரஞ்சிதமே' பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கின்றார். அந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement