• Dec 10 2022

தமிழில் வாய்ப்புக் கிடைக்காததால் ஹிந்தி சினிமாவிற்கு தப்பி ஓடிய பிக்பாஸ் பிரபலம்- அட இவர் நல்ல நடிகனாச்சே

Listen News!
stella / 1 month ago
image
Listen News!

மங்கத்தா, ஜில்லா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தவர் தான் நடிகர் மஹத்.இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் யாஷிகாவுடன் இணைந்து செய்த சேட்டைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

அதனை அடுத்து சில திரைப்படங்களில் நடித்த இவர் சத்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகி வரும் 'டபுள் எக்ஸ்எல் என்னும் ஹிந்தி படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் பாலிட்வூடில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


 இப்படம் குறித்து மஹத் ராகவேந்திரா கூறியதாவது, ''சினிமா என்பது, பார்வையாளர்களை மகிழ்விப்பதை விட அவர்களுக்குள் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கும் காரணி என நான் நம்புகிறேன். எனக்கு நீண்ட காலமாக ஹிந்திப் பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது, ஆனால் இந்த ஸ்கிரிப்டைப் படித்தபோது, ​​இது எனக்கான படம் என்று தெரிந்தது. சத்ரம் ரமணிதான் எனக்கு இந்தப் படத்தைத் தந்தார். என்னை நடிக்க வைக்க நினைத்ததற்கு அவருக்கு நன்றி.

நான் கேட்டதிலேயே இதயத்தை உருக்கும் அற்புதமான கதை இது. எனக்குத் தெரிந்த ஒவ்வொரு ஆணும் அல்லது பெண்ணும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் உடலைப் பற்றி வெட்கப்படுகிறார்கள். கொஞ்சம் குண்டாக இருப்பது, ஒருவரின் தோலின் நிறம், அவர்களின் உயரம் மற்றும் அவர்கள் கண்மூடித்தனமாக நம்பும் அழகு எனும் மாயை என அனைத்தையும் உலகம் பார்க்கும்படி கேள்வி கேட்கிறது இப்படம்.


இதில் முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் இயக்குநர் சத்ரம் ரமணி மற்றும் முதாஸ்ஸர் அஜிஸ், சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோருடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். ஒரு ஆணோ, பெண்ணோ அவர்கள் யாராக இருக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் கொண்டாடப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்பதை இந்தப் படம் அழுத்தமாக சொல்லும்'' என்றார். 'டபுள் எக்ஸ்எல்' திரைப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரைக்குவரவுள்ளது  என்பதும் குறிப்பிடத்தக்கது.