• Apr 24 2024

பக்கா மாஸான வில்லன் கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் சிபி- இவ்வளவு பெரிதாக முடி வளர்த்திருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமாகியவர் தான் சிபி. இப்படத்தில் இவருடைய யதார்த்தமான நடிப்பு இள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

இதனை அடுத்து சிபி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல்யமான ஷோவான பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 லட்சம் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.


இதனை அடுத்து தற்பொழுது அஜித் நடிப்பில் உருவாகும் துணிவு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவருடன் பாவனி மற்றும் அமீர் ஆகிய பிக்பாஸ் பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.


இந்த நிலையில் சிபி தலை முடி வளர்த்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன படத்தின் கெட்டப்பாக இருக்கம் என்றும் ஹீரோவாக நடித்து வருகின்றீர்களா? எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement