• Sep 22 2023

பல வருடங்கள் கழித்து தன் செல்ல மகனை மீட் பண்ண பிக் பாஸ் ADK… அதுவும் இப்படியொரு நாளிலா?..Viral Video..!

ADK
Jo / 1 month ago

Advertisement

Listen News!

இலங்கை நாட்டினை சேர்ந்த ஏடிகே. 2012ம் ஆண்டு வெளியான ஆர்யன் என்ற ஆல்பம் மூலமாக உலகமெங்கும் பேமஸ் ஆனார். பின்னர் தினேஷ் கனகரத்தினம் என்ற பெயரை ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் (ADK) என்று மாற்றிக் கொண்டார். முதன் முதலாக ஆத்திச்சூடி பாடலை விஜய் ஆண்டனியின் இசையில் பாடினார்.


இந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முதல் சினிமா பாடலும் அதுவே. பின்னர் பல பாடல்கள் பாடும் அவருக்கு கிடைத்தது. அச்சம் என்பது படத்தில் சோக்காலி பாடல், கடல் படத்தில் மகுடி மகுடி, ரஜினி முருகனில் என்னம்மா இப்படி பண்றிங்களேமா போன்ற பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை. 

ஆல்பம் பாடல்களிலும் பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.


இவர் ஏடிகே ஜாஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபியான் என்ற ஒரு மகன் இருக்கிறார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் ஏடிகே தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார். தற்போது ஏடிகே பல வருடங்கள் பிரிந்திருந்த தனது மகனை சந்தித்துள்ளார். மேலும் மகனின் 9 வது பிறந்தநாளையும் கொண்டாடியுள்ளார்.

தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.இந்த வீடியோ  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement