• Mar 23 2023

காதலருடன் கேரளாவில் பிக்பாஸ் நடிகை ஆயிஷா..வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஆயிஷா தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது.மேலும்  இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்,  கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, ஈழத்தை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.இதன்  பின்னர் இறுதி போட்டியில், அசீம்    பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால்  அறிவிக்கப்பட்டார். அசீம்க்கு பரிசாக மாருதி சுசூகி பிரேஸா காரும், 50 லட்ச ரூபாய் காசோலை & வெற்றிக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

அத்தோடு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் சீரியல் நடிகை ஆயிஷா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சன் டிவி சேனலில் ஒளிபரப்பான மாயா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன் மகள் வந்தாள் ஆகிய சீரியல்களிலும் ஆயிஷா நடித்துள்ளார்.


சோசியல்மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆயிஷா அவ்வப்போது தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர். மேலும் தமது வாழ்வின் முக்கிய தருணங்களை ரசிகர்களிடம் பகிர்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர்.


சில நாட்களுக்கு முன் நடிகை ஆயிஷா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Proposal Day-வை முன்னிட்டு தனது காதலருடன் இருக்கும் தனது புகைப்படத்தை, "Propose Day ஆமே" என தலைப்பிட்டு  வெளியிட்டு இருந்தார்.  அதில் காதலரின் முகம் தெரியாத வண்ணம் புகைப்படம் இருந்தது.


 எனினும் சமீபத்தில் காதலர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை ஆயிஷா பகிர்ந்திருந்தார். இந்நிலையில் காதலருடன் கொச்சி கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தையும் வீடியோவையும் ஆயிஷா பகிர்ந்துள்ளார். மேலும்"My Bundle of Joy" என பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement