• Feb 02 2023

வாரிசு படத்தின் அம்மா பாடலை பகிர்ந்து உருக்கமான பதிவு போட்ட பிக்பாஸ் அமீர்- ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் அமீர். இவர் அந்த நிகழ்ச்சியில வைல்ட் காட் என்ட்ரியாக கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.இதனை அடுத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆனார்.

அத்தோடு இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளரான பாவனியை காதலித்து வந்தார்.இவர்களின் திருமணம் வெகுவிரைவில் நடக்கும் என நம்பப்படுகின்றது. மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே தனது அம்மா குறித்து உருக்கமாக பேசியிருந்தார்.


அதாவது “நான், அண்ணா, அம்மா 3 பேர்தான், மண்ணு வீடு தான். ஊட்டியில் மிகவும் ஏழ்மையான குடும்பம். ஒரு கிலோ தக்காளி 2 ரூபாய், வீட்ல எப்போதுமே தக்காளி சட்னி - தக்காளி ரசம் தான் இருக்கும். நான் பிரபு தேவா மாதிரி டான்ஸ் ஆடணும்னு சொல்லிட்டே இருப்பாங்க.. அம்மாவுக்கு நான் டான்ஸ் ஆடுவது பிடிக்கும். எனக்கு டான்ஸ் பிடிக்காது. நான் ஆர்மிக்கு போகணும்னு தான் நினைச்சேன். அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்டா அடிச்சு வளர்த்தாங்க. நானும் அம்மாவும் 2 பேரும் மட்டும் கோயம்புத்தூர்ல ஒரு வாட்கை வீட்ல குடியேறினோம். வாரம் ஒருமுறை படத்துக்கு கூட்டிட்டு போவாங்க. நான் சிம்பு ரசிகன் என்பதால், வல்லவன் படத்துக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அம்மா அனுப்பினாங்க. அம்மா ரொம்ப ரொம்ப அழகா இருப்பாங்க. என்ன மாதிரி இருக்க மாட்டாங்க.

ஸ்கூல்ல நான் ரொம்ப ரவுடித்தனம் பண்ணேன். சண்டை போடுவேன். அதனால் அம்மாவ நான் விட்டுட்டேன். அன்னைக்கு வேலைக்கு போன அம்மா, வீட்டுக்கு வரல. அந்த ஒரு நாள் இரவு அம்மா வீட்டுக்கு வருவாங்கனு நான் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்தேன். ஆனா அம்மா வரல. அதுக்கு அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அடுத்த நாள் அம்மாவின் செயினுடன் வந்த போலீஸ் என்னிடம் விஷயத்தை சொல்லி, ஒரு ஏரிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கு என் அம்மாவின் உடல் மற்றும் புடவையை பார்த்ததுமே அம்மாவை தூக்கினேன், எறும்பாய் இருந்தது. என்ன ஆனதென தெரியவில்லை. போலீஸார் என்னை ஸ்டேஷன் அழைத்து வந்தனர். அம்மாவ கொல பண்ணவன் என் கண் முன்னாடிதான் இருந்தான்.


அம்மா நினைவால் இரவெல்லாம் அழுவேன். இரவென்றாலே எனக்கு பயம். பிக்பாஸ் வீட்டிலும் இரவு அழுதேன். சிபி, அக்‌ஷரா வீடுகளில் இருந்து வந்து பேசும்போது எனக்கு கஷ்டமா இருந்துச்சு. சின்ன ஒரு லோக்கல் சேனலில் நான் டான்ஸ் ஆடும்போது ஊர் முழுக்க சொன்ன என் அம்மா, இன்னைக்கு தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய சேனலில் இவ்வளவு பெரிய ஷோவில் நான் நிற்கிறேன். இப்போது அம்மா இல்லை. ஆனால் இந்த சாதனைகள் எல்லாம் அம்மாவுக்காக தான் என நான் நினைத்துக் கொள்கிறேன்” என்று அழுதபடி கூறியிருந்தார். இதுவே ரசிகர்களின் மனதை உருகச் செய்தது.


 இந்த நிலையில் அமீர், தன் அம்மா இடம் பெற்றுள்ள தன் பெற்றோரின் திருமண ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார்.மேலும் விஜய் நடிப்பில் பொங்கல் சமயத்தில் வெளியாகவுள்ள ‘வாரிசு’ படத்தில், சித்ரா பாடியுள்ள உருக்காமான பாடலை பின்னணியில் வைத்து, ‘ஹேப்பி பர்த்டே அம்மா’ என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் அமீருக்கு, “உங்கள் அம்மாவும் அவரது ஆசியும் என்றுமே உங்களுடன் இருக்கும்” என்று குறிப்பிட்டு வாழ்த்துகளை கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement