மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிக்பாஸ் யாஷிகா-இனிமேல் வீட்டில் தான் சிகிச்சையாம்.

436

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டானவை. அந்த வகையிவ் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியானது இது வரைக்கும் 4 சீசன்களைக் கடந்துள்ளது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இவர் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அத்தோடு சில நாட்களுக்கு முன் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், அவருடன் காரில் சென்றிருந்த அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த செய்து கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை யாஷிகா ஆனந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, சில ஆப்ரேஷன்களும் நடந்தது.

இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளாராம் நடிகை யாஷிகா ஆனந்த்.மேலும் நடிகை யாஷிகா ஆனந்தின் வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.மேலும் யாஷிகாவுடன் காரில் சென்ற, இரு இளைஞர்களிடமும் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருதாகவும் தெரிவித்துள்ளனர் என்பதும் முக்கியமாகும்.