மாடர்ன் உடையில் வித்தியாசமான போஸ் கொடுத்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்-குவியும் லைக்குகள்

268

தமிழ் சின்னத்திரையில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஹிட்டானவை எனலாம். இவ்வாறு சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த ரியாலிட்ரி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந் நிகழ்ச்சி இதுவரைக்கும் 4 சீசன்களைக் கடந்துள்ளது.

அந்தவகையில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகக் கலந்து கொண்டவர் தான் நடிகை சாக்‌ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து இளம் நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது நடிகை சாக்‌ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக காத்திருக்கின்றன. அத்தோடு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் ட்ரஸ்ல ஹாட்டா போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இந்தப் புகைப்படமே ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.