பிக்பாஸ் போட்டியாளரும் கவிஞருமான சினேகனுக்கு திருமணம் முடிந்து விட்டதாம்- வைரலாகும் புகைப்படம்.

700

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந் நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 4 சீசன்களைக் கடந்துள்ளது என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 1இல் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றியவர் தான் சினேகன். மேலும் இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின் பாண்டவர் பூமி படத்தில் அனைத்துப் பாடல்களும் எழுதியதன் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர்.இதனைத் தொடர்ந்து சாமி, சூரரைப் போற்று, ராம் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

அத்தோடு 700க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் தமிழ் நடிகையான கன்னிகா என்பவருடன் சினேகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களின் திருமணம் கமலஹாசன் முன்னிலையில் நடைபெற்றது. இன்று இரவு 8 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறதையும் காணலாம்.