பிக் பாஸ் வீட்டில் அடிதடி சண்டை-திடீரென பேசிய பிக்பாஸ்- வெளியேற்றப்படும் முக்கிய போட்டியாளர்..!

54507

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் ரியாலிட்ரி ஷோவாக இருப்பது பிக்பாஸ் ஆகும். இந்த நிகழ்ச்சியானது ஹிந்தி தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழில் 5 வது சீசனும் ஹிந்தியில் 15வது சீசனும் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறு இருக்கையில் பிக் பாஸ் ஷோ என்றாலே எப்போதும் காதல், மோதல், அடிதடி சண்டை என எல்லாமே இருக்கும். அதிலும் சில நேரங்களில் சண்டை கைகலப்பு/அடிதடி வரை கூட செல்வதுண்டு. தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் நடைபெற்று இருக்கிறது. தமிழில் இல்லை ஹிந்தி பிக் பாஸில்.

தற்போது ஹிந்தியில் நடந்து வரும் பிக் பாஸ் 15 இன்னும் சில வாரங்களில் முடிவு உற இருக்கிறது. இந்த நேரத்தில் போட்டியாளர்களுக்கு சில கடினமான டாஸ்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ராஷாமி தேசாய் மற்றும் தேவலீனா பட்டசார்ஜீ ஆகியோர் இடையே போட்டி நடந்து கொண்டிருக்க அவர்களுக்கு ஆதரவாக உமர் ரியாஸ் மற்றும் பிரதிக் ஆகியோர் செயல்படுகின்றனர்.

அத்தோடு அவர்கள் ஒருகட்டத்தில் அடிதடி சண்டையில் இறங்குகின்றனர். அது ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கின்றது. அதன் பின் பிக் பாஸ் குறுக்கிட்டு இந்த வன்முறையில் ஈடுபட்ட உமர் ரியாஸை பற்றி பேசுகிறார். அங்கு இருக்கும் அனைவரும் ஷாக் ஆகி இருப்பதை பார்த்தால் உமர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கிறார் என தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: