பிக்பாஸ் பிரபலம் தனீஷா முகர்ஜிக்கு கொரோனா..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

165

பாலிவுட்டில் அறிமுகமாகி 2007ஆம் ஆண்டு தமிழில் வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் தனீஷா முகர்ஜி.

இவர் தற்போது தமிழை விட்டுவிட்டு பாலிவுட்டில் படங்கள் நடித்து வருவதோடு சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகின்றார்.

இவ்வாறு இருக்கையில் அதிகம் பேர் ரசித்த பிக்பாஸ்-7இல் இரண்டாம் இடம்பிடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் தனீஷா முகர்ஜி கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். மேலும் சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

மேலும் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது..

“எனக்கு கோவிட் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனே வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களாக என்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.