திருமணம் செய்ய ஆசைப்படும் பிக்பாஸ் பாலாஜி- மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

211

தமிழ்த் தொலைக்காட்சிகளில் சிறந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் விஜய்டிவி முன்னணியில் காணப்படுகின்றது. அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி உலகம் முழுதுவம் வாழும் தமிழ் மக்களால் ரசிக்கப்படும் ரியாலிட்ரி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி காணப்படுகின்றது.

மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் நடத்தப்படுவதோடு தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இதுவரைக்கும் பிகபாஸில் 4 சீசன்கள் நிறைவு பெற்றிருப்பதும் தெரிந்ததே.அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4இல் போட்டடியாளராகக் கலந்து கொண்டவர் தான் பாலாஜி முருகதாஸ்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஆரி அர்ஜீனனும் ரன்னராக பாலாஜியும் தெரிவு செய்யப்பட்டனர்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாலாஜி சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்டில் ’தனது அனைத்து நண்பர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் ஆனால் நான் மட்டும் இன்னும் போகோ சேனலில் சோட்டா பீம் பார்ப்பதில் பிசியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்யுக்தா, ‘லாக்டவுனில் சரியான வேலையைத்தான் செய்கிறீர்கள் என்றும் பாலாஜி முருகதாஸின் இந்த பதிவிற்கு ஆஜித், கேப்ரில்லா உள்ளிட்டவர்களும் கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ளனர். அத்தோடு ரசிகர்கள் பலரும் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: