பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதல் ஜோடிகளாக அறிமுகமாகியவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இதில் சின்னத்திரை நடிகையாக பாவனி விஜய் டிவியில் ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி போன்ற சீரியல்களிலும் சன்டிவியில் ராசாத்தி சீரியலிலும் நடித்திருக்கின்றார்.
அமீர் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் நடன இயக்குநராக வலம் வந்தவர். இதில் பாவனி பிக்பாஸின் ஆரம்பத்திலேயே பங்குபற்றினார். ஆனால் அமீர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் காட் என்ட்ரியாக நுழைந்தார்.
இதனை அடுத்து இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி டைட்டில் வின்னராகவும் தேர்வானார்கள்.மேலும் அவர்கள் அஜித்தின் துணிவு படத்தில் ஜோடியாக நடித்து இருக்கின்றனர். அந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்த போது அவர்கள் அஜித் உடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருந்தனர். அது அப்போது வைரல் ஆகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து காதலர்களாக வலம் வரும் இவர்கள் அடுத்த வருடம் திருமண பந்தத்திலும் இணைய உள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது அமீர் மற்றும் பாவனி இருவரும் ஜோடியாக வெளிநாட்டுக்கு ட்ரிப்புக்கு கிளம்பி இருக்கிறார்கள்.அதாவது துபாய் செல்லும் விமானத்தில் எடுத்த போட்டோவை பாவனி வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அடுத்த நயன்-விக்கியா...? நீங்கள், சோ கியுட் என கூறி பல கெமண்ட் பண்ணி வருகிறார்கள்.அதாவது திருமணத்திற்கு முன்னரே நயனும் விக்கியும் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள்.அது போல இவர்களும் செய்கிறார்களாம்.சூப்பர் ஜோடி என கூறி வருகிறார்கள்.
Listen News!