மீண்டும் தமிழில் ரீ என்ட்ரீ கொடுக்கும் பாவனா- என்ன படத்தில் நடிக்கின்றார் தெரியுமா?

600

தென்னிந்திய சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை பாவனா. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துப் பிரபல்யமானவர்.

தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அத்தோடு தல அஜித்துடன் அசல் திரைப்படத்தில் நடித்து முக்கிய நடிகையாக வலம் வந்தார். பின்பு சில காரணங்களால் தமிழில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் பல படவாய்ப்புக்களையும் இழந்தார்.

பின்பு திருமணம் முடிந்த பிறகு கன்னட படத்தில் மட்டும் நடித்து வந்தார். அந்த வகையில் ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற கலாசார விழாவில் நடனமாடிய பாவனாக்கு மலையாளப் படங்களில் நடிக்க மீண்டும் வாய்ப்புக் கிடைத்தது.

அந்த வகையில் தற்போது பாவனா நடிப்பில் கோவிந்தா கோவிந்தா என்ற கன்னட படம் வெளியாக இருக்கிறது. இதில் சுமந்த் சைலேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் இந்த படத்திற்குப் பிறகு தமிழில் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.